மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று இரவு சென்னை கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் கலை, இலக்கியம், விளையாட்டு மற்றும் தொழில் துறையைச் சேர்ந்த 24 முக்கிய பிரமுகர்கள் சந்தித்தனர்.
வேலூரில் இன்று (ஜூன் 11) நடைபெற உள்ள பாஜக 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார்.
விமான நிலையத்திலிருந்து சென்னை கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலுக்கு சென்ற அமித்ஷா, அங்கு பல்வேறு துறை சார்ந்த 24 முக்கிய பிரமுகர்களை சந்தித்தார்.
அதன்படி பத்மஸ்ரீ விருது பெற்ற விளையாட்டு வீராங்கனை அனிதா பால்துரை, அப்போலோ மருத்துவமனை நிர்வாக துணை தலைவர் பிரீத்தா ரெட்டி, புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தொழிலதிபர் நல்லி குப்புசாமி,
பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தர், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, ஆற்காடு நவாப்கள் முகமது அப்துல் அலி, நவாப்சதா முகமது ஆசிப் அலி, இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன், செட்டிநாடு சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநர் முத்தையா, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன்,
ஹாக்கி வீரர் பாஸ்கரன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், வின் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் தேவநாதன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, திரைப்பட இயக்குநர் ராஜசேகரன், திரைப்பட தயாரிப்பாளரும் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவருமான ஐசரி கணேஷ், திரைப்பட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், உள்ளிட்ட 24 முக்கிய பிரமுகர்கள் அமித்ஷாவை சந்தித்தனர்.
இந்த சந்திப்பானது சுமார் ஒரு மணி நேரம் வரை நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பல்வேறு துறை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் சந்தித்தது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
செல்வம்
கிச்சன் கீர்த்தனா: எடையைக் குறைக்க நினைப்பவர்கள் அரிசி உணவைத் தவிர்ப்பது நல்லதா?
அதிமுகவும் பாஜகவும் அடித்து செல்லப்படும்: சேலத்தில் ஸ்டாலின்