தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் “என் மண் என் மக்கள்” நடைபயணத்தை துவங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை 4 மணியளவில் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் செல்கிறார்.
மாலை 5.45 மணியளவில் நடைபயணத்தை துவங்கி வைத்து ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள திடலில் புதிய நாடாளுமன்றம் வடிவில் அமைக்கப்பட்டுள்ள துவக்க விழாவில் உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தேமுதிக சார்பில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா உள்ளிட்ட கூட்டணி கட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
முன்னதாக அமித்ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் செல்கிறேன். பிரதமர் மோடி முன்வைத்த மாற்றத்தினை மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதிக்கும் எடுத்துச் செல்லும் வகையில் தமிழ்நாடு பாஜக நடத்தும் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையை இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
செல்வம்
நிலத்தை மீட்டு மக்களிடம் கொடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்பு!