மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று (செப்டம்பர் 3) தமிழ்நாடு பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா சந்தித்துப் பேசியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, உயர்படிப்புக்காக லண்டன் சென்றுள்ள நிலையில், கட்சியை நிர்வகிக்க ஹெச்.ராஜா தலைமையில் 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை அவர் சமீபத்தில் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து இன்று டெல்லி சென்ற அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை இன்று காலை சந்தித்து பேசினார்.
அப்போது, தமிழ்நாடு அரசியல் நிலவரம் மற்றும் பாஜக வளர்ச்சிப் பணிகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் ஹெச்.ராஜா இன்று சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாக கமலாலய வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
காசி படத்தில் நடித்த பிறகு, பார்வையில்லாமல் போய் விட்டது!- நடிகர் விக்ரம் சொல்லும் காரணம்
“மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழக மக்களுக்கும் உதவும்” – சென்னையில் டி.கே.சிவக்குமார் பேட்டி!