மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு, தமிழக பாஜக அலுவலகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது பவள விழா இன்று (நவம்பர் 12) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பங்கேற்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒருநாள் பயணமாக தமிழகம் வந்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின், அங்கிருந்து சென்னை தி.நகரில் உள்ள தமிழக தலைமை பாஜக அலுவலகமான கமலாலயத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அங்கு அமித் ஷாவுக்கு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், சிறப்பான வரவேற்பு அளித்தனர். அவருக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு, 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து அமித்ஷா தமிழக பாஜக நிர்வாகிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டார்.
மேலும், பூத் கமிட்டியை பலப்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் அமித்ஷா தமிழக பாஜக நிர்வாகிகளிடம் கேட்டறிந்துள்ளார்.
ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இக்கூட்டத்தில், கோவை சம்பவம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அந்த ஆலோசனைக்குப் பிறகு அமித்ஷா சென்னை விமான நிலையம் புறப்பட்டுச் சென்றார்.
ஜெ.பிரகாஷ்
அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறாரா ரமேஷ் பிரபா? அவரே சொன்ன பதில்!
Comments are closed.