அதிமுக உட்கட்சி பிரச்சனையில் தலையிட விரும்பவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆகியோரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்,
எஸ்.பி வேலுமணி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது பாஜக தலைவர் அண்ணாமலையும் உடனிருந்தார்.
அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நிர்வாகிகளை அமித்ஷா சந்தித்திருக்கிறார் என்பதன் மூலம் எடப்பாடி தான் அதிகாரப்பூர்வமான அதிமுக என்பதற்கு அரசியல் ரீதியாக பாஜக ஒப்புதல் அளித்துவிட்டதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் நியூஸ் 18 சேனலுக்கு இன்று (மே 3) கர்நாடகா தேர்தல் தொடர்பாக பேட்டியளித்த அமித்ஷாவிடம்,
“தமிழ்நாட்டில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஒன்றிணைய விரும்புகிறீர்களா?” என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு,
“அதிமுக உட்கட்சி பிரச்சனையில் தலையிட நான் விரும்பவில்லை. இருவரும் பேசி சுமூக முடிவு எடுக்க வேண்டும். அவர்கள் சுமூக முடிவு எடுக்க வேண்டுமா வேண்டாமா என்பது என்னை சார்ந்தது அல்ல” என்று தெரிவித்துள்ளார்.
அமித்ஷாவின் இந்த கருத்து எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பினரிடையே விவாத பொருளாக மாறியுள்ளது.
செல்வம்
பல் பிடுங்கிய விவகாரம்: சிபிசிஐடி மேலும் ஒரு வழக்குப் பதிவு!
கீழ்பவானி ஆற்றில் கான்கிரீட் தளம்: சீமான் எதிர்ப்பு!
தி கேரளா ஸ்டோரி: 3வது மனுவையும் விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!