"America's golden age has arrived": Trump's victory speech!

”அமெரிக்காவின் பொற்காலம் வந்துவிட்டது” : டிரம்ப் வெற்றி உரை!

அரசியல் இந்தியா

அமெரிக்க அதிபர் தேர்தலில் 267 தேர்தல் வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளதால் டொனால்ட் டிரம்பின் வெற்றி தற்போது உறுதியாகியுள்ளது.

ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இடையேயான கடும் போட்டியுடன் நேற்று அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து இன்று (நவம்பர் 6) அதிகாலை முதல் வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற 270 தேர்தல் வாக்குகள் பெற வேண்டியது அவசியம்.

இந்த நிலையில் மதியம் 1 மணி வாக்குப்பதிவு நிலவரப்படி டிரம்ப் மொத்தம் 27 மாகாணங்களில் வென்று 267 தேர்தல் வாக்குகளை கைப்பற்றி முன்னிலையில் உள்ளார்.

குறிப்பாக ஸ்விங் ஸ்டேட்ஸ் எனப்படும் 7 மாகாணங்களில் தற்போது வரை வடக்கு கரோலினா, ஜியார்ஜியா, பென்சில்வேனியா ஆகிய மாகாணங்களை அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நெவாடா, அரிசோனா, விஸ்கான்சின், மிச்சிகன் உள்ளிட்ட மாகாணங்களில் அவர் முன்னிலையில் இருப்பதால் பெரும்பான்மையுடன் டிரம்பின் வெற்றி உறுதியாகியுள்ளது.

கமலா ஹாரிஸ்  கலிபோர்னியா, வாஷிங்டன் உள்ளிட்ட 20 மாகாணங்களில் வென்ற போதும் 224 தேர்தல் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

அமெரிக்கா சக்திவாய்ந்த ஆணையை வழங்கியுள்ளது!

இதற்கிடையே தன்னுடைய வெற்றி உறுதியான நிலையில் புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள கவுண்டி கன்வென்ஷன் சென்டரில், தனது குடும்பத்தினருடன் ஆதரவாளர்கள் முன்னிலையில் டிரம்ப் வெற்றி உரையாற்றினார்.

Image

அதில், “என்னை 45வது மற்றும் 47வது அதிபராகத் தேர்ந்தெடுத்ததற்காக அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது ஒவ்வொரு மூச்சிலும் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் போராடுவேன். அமெரிக்காவின் பொற்காலம் இங்கே தொடங்குகிறது. வலுவான, பாதுகாப்பான மற்றும் வளமான அமெரிக்காவை வழங்கும் வரை நான் ஓயமாட்டேன்.

யாரும் நினைக்காத தடைகளைத் தாண்டிவிட்டோம். இந்த வெற்றி அரசியல் வரலாற்றில் இதுவரை யாரும் கண்டிராத ஒன்று. இந்த வெற்றி நம் நாட்டை குணப்படுத்த உதவும்.

உலகிலேயே மிகச்சிறந்த நாடு அமெரிக்கா தான். மக்கள் வாக்குகளை (Popular votes) வென்றது மிகவும் நன்றாக இருந்தது. நாங்கள் உங்களை மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையடையவும் செய்ய போகிறோம். இது ஒவ்வொரு அமெரிக்கருக்கும் கிடைத்த வெற்றி. அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற இது எங்களுக்கு உதவும்.

அமெரிக்கா எங்களுக்கு இதுவரை இல்லாத சக்திவாய்ந்த ஆணையை வழங்கியுள்ளது. செனட்டின் கட்டுப்பாட்டை திரும்பப் பெற்றுள்ளோம். செனட்டில் எங்களது வெற்றி முற்றிலும் நம்பமுடியாததாக உள்ளது. தற்போது குடியரசு கட்சியில் சில சிறந்த புதிய செனட்டர்கள் உள்ளனர். பிரதிநிதிகள் சபையின் கட்டுப்பாட்டை நாங்கள் மிகச் சிறப்பாக வைத்திருப்போம்.

பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டிலிருந்து கடவுள் ஒரு காரணத்திற்காக என் உயிரைக் காப்பாற்றினார். எங்களுக்கு முன்னால் உள்ள பணி எளிதானது அல்ல. ஆனால் கடவுள் என்னை காப்பாற்றி அமெரிக்காவின் மகத்துவத்தை மீட்டெடுக்க விரும்பினார். இப்போது அந்த பணியை ஒன்றாக நிறைவேற்றப் போகிறோம்” என்று பேசினார்.

தொடர்ந்து தனது மனைவி மெலனா மற்றும் தனக்காக பல கோடிகளை செலவழித்து மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் செய்த தொழிலதிபர் எலோன் மஸ்க் ஆகியோருக்கும் டிரம்ப் நன்றி தெரிவித்தார்.

மேலும் அரசாங்கத்தின் செயல்திறன் ஆணைக்குழுவை வழிநடத்துவதற்கு மஸ்க்கை நியமிக்க உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

 கிறிஸ்டோபர் ஜெமா

36,000 இளைஞர்களுக்கு வேலை… கோவைக்கு மற்றொரு புதிய ஐடி பார்க் : ஸ்டாலின் அறிவிப்பு! 

ட்ரம்ப் vs கமலா : யார் யார் எந்தெந்த மாகாணங்களில் வெற்றி?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *