ameer wishes vijayakanth speedy recovery

விஜயகாந்த் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்: அமீர்

அரசியல்

கடந்த நவம்பர் 18-ஆம் தேதி தேமுதிக நிறுவனரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில், விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று (நவம்பர் 29) அறிக்கை வெளியிட்டது.

விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டனர்.

இந்தநிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப இறைவனை வேண்டிக்கொள்வதாக இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரையுலகில் நான் கண்ட நல்ல மனிதர்களில் முக்கியமானவரான கேப்டன் விஜயகாந்த்  உடல்நிலை சீராக இல்லை என்ற தகவலைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியுற்றேன்.

வாடிய பயிரை, பசியினால் இளைத்தோரை, பிணியால் வருந்துவோரை, ஏழைகளாய் உழல்வோரை கண்டுளம் பதைத்த வள்ளலாரைப் போல, நம்மிடையே திகழ்ந்த தன்னலமற்ற மனிதநேயப் பண்பாளரான அவர், இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள, எனும் குறள் வழி வாழ்ந்த ஈகைத் தமிழன் கேப்டன் விரைவில் பூரண உடல் நலம் பெற்று சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவன் தாளில் இறைஞ்சுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: டொமேட்டோ – பிரெஞ்ச் ஆனியன் சூப்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *