அம்பேத்கர் நினைவுநாள்: மு.க.ஸ்டாலின் சூளுரை!

“அம்பேத்கரின் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டமேதை அம்பேத்கரின் 66ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி நினைவை அனுசரித்து வருகின்றனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அம்பேத்கர் உருவச்சிலை திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பதிவில்,

“ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர்: சமத்துவத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார்: புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம்” என அதில் பதிவிட்டுள்ளார்.

ஜெ.பிரகாஷ்

குஜராத் தேர்தல்: வாக்குச் சதவிகிதம் குறைவு ஏன்?

தாம்பரம்-வேளச்சேரி இடையே மெட்ரோ ரயில்?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts