பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாள்: பொது விடுமுறை அறிவிப்பு!

அரசியல்

பாரத ரத்னா பி.ஆர்.அம்பேத்கரின் 130வது பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதியை பொது விடுமுறையாக மத்திய அரசு இன்று (ஏப்ரல் 11) அறிவித்துள்ளது.

இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த நாளை தேசிய பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிதி மசோதா மீதான விவாதம் நடந்த போது விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் அம்பேத்கரின் பிறந்த நாளை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

அதனையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 4ம் தேதியன்று ஏப்ரல் 14 ஆம் தேதியை தேசிய விடுமுறை தினமாக அறிவித்து மத்திய அரசு குறிப்பாணை வெளியிட்டது.

எனினும் இன்னும் 3 தினங்களில் அம்பேத்கரின் 130வது பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் மத்திய அரசு தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கவில்லை.

இதுதொடர்பாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மத்திய அமைச்சர்
ஜிதேந்திர சிங்கிற்கு இன்று கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் டாக்டர் பிஆர் அம்பேத்கரின் 130வது பிறந்தநாளைக் குறிக்க ஏப்ரல் 14ஆம் தேதியை பொது விடுமுறையாக மத்திய அரசு இன்று அறிவித்து குறிப்பாணை வெளியிட்டுள்ளது.

அதில், ”டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய கருவிகள் சட்டத்தின் 1881, 25 வது பிரிவின் கீழ் உள்ள அதிகாரங்களை செயல்படுத்துவதன் மூலம், இந்தியா முழுவதும் உள்ள தொழில் நிறுவனங்கள் உட்பட அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

பெப்சி தலைவராக மீண்டும் ஆர்.கே.செல்வமணி

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *