பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ஆம் தேதியை மத்திய அரசு உடனடியாக பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி.ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
அம்பேத்கரின் பிறந்த நாளை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று 2022ஆம் ஆண்டு மக்களவையில் நிதி மசோதா மீதான விவாதம் நடந்த போது விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் அதே ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி, அப்பேத்கர் பிறந்தநாளான 2022 ஏப்ரல் 14ஆம் தேதி அனைத்து அரசு மற்றும் பொது நிறுவனங்களுக்கும் விடுமுறை என்று மத்திய அரசு குறிப்பாணை வெளியிட்டது.

இந்தச்சூழலில் இந்த ஆண்டும் இன்னும் 3 தினங்களில் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில்,
உடனடியாக வரும் ஏப்ரல் 14ஆம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று ரவிக்குமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
2022ஆம் ஆண்டில் ஏப்ரல் 4ஆம் தேதியே அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில்,
இந்த ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி ஆன பிறகும் ஏன் இன்னும் விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரியா
கடைசி பந்து… த்ரில் வெற்றி: பெங்களூருவை கலங்கடித்த லக்னோ!
ஆதரவு நிலைப்பாடே இந்தியாவுக்கான சரியான தேர்வு: உக்ரைன் அமைச்சர்!