சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 20) காவல்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்று வருகிறது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதற்கு பதிலளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, “அம்பாசமுத்திரம் நிகழ்வு குறித்து சமூக வலைதளங்களில் புகார்கள் வந்தவுடன் அங்கு பணியாற்றிய உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மார்ச் 26-ஆம் தேதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
அதனை தொடர்ந்து PSO பிரிவு 151 இந்த புகார் நிர்வாக துறை நடுவர் Executive Magistrate மற்றும் சேரன்மாதேவி சார் ஆட்சியர் ஆகியோர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையில் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மார்ச் 29-ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சி தலைவர் இந்த நிகழ்வு தொடர்பாக உயர் அதிகாரி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிட பரிந்துரைத்ததின் அடிப்படையில் ஐஏஎஸ் அதிகாரி அமுதா உயர் மட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பல்வீர் சிங் மீது ஏப்ரல் 17-ஆம் தேதி குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
உயர்மட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்ட அமுதா ஐஏஸ் நான்கு நாட்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் முகாமிட்டு நடத்திய விசாரணையின் அடிப்படையில் சிசிடிவி கேமராவில் பதிவாகிய ஆதாரங்களை அடிப்படையாக வைத்து நேற்று இடைக்கால அறிக்கையை அரசிற்கு சமர்ப்பித்துள்ளார்.
அவரது அறிக்கையின் அடிப்படையில் தான் நேற்று இரவு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
செல்வம்
டெல்லியில் இரண்டாவது ஆப்பிள் ஷோரூம்: டிம் குக் திறந்து வைத்தார்!
“அதிமுக தலைமையை தொண்டர்கள் தான் முடிவு செய்வார்கள்”: மருது அழகுராஜ்