அமர்பிரசாத் எதிர்ப்பு: மிரட்டலுக்கு பணிந்தாரா மாரிதாஸ்?

Published On:

| By Jegadeesh

நல்ல மனிதர்கள், பெரியவர்கள் பலர் கேட்டுக் கொண்டதால் விரோதம் விட்டு விலகி, ஆளும் திமுக அரசுக்கு எதிரான என் பணியைத் தொடர விரும்புகிறேன் என்று பாஜக ஆதரவு யூடியூபர் மாரிதாஸ் இன்று (பிப்ரவரி 8 ) ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

யூடியூபர் மாரிதாஸை சீண்டும் வகையில் பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

இதனால் அமர் பிரசாத் பற்றிய வீடியோ ஒன்றை மாரிதாஸ் நேற்று (பிப்ரவரி 7 ) ஆம் தேதி வெளியிட்டார். அது பாஜக வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

அந்த வீடியோவில், எல்லா கட்சிகளுக்கும் சென்று தன்னை அமர் பிரசாத் அறிமுகம் செய்து கொள்கிறார். அப்போது National Cyber Safety and Security Standards-ன் பொது இயக்குநராக செயல்பட்டு வருவதாக கூறி விடுகிறார்.

இதன்மூலம் மத்திய அரசின் முக்கியமான பிரதிநிதியாக, டெல்லியில் இருந்து செயல்பட்டு வருவது போல காண்பித்திருக்கிறார்.

அதன்பிறகு அமர் பிரசாத் ரெட்டி 2011 ஆம் ஆண்டு Sun Institute of Cyber Safety Limited என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.

Amarprasad Did Maridas bow to intimidation

இந்நிலையில் , தனது Sun Institute என்ற நிறுவனத்தின் பெயரை National Cyber Safety Limited என மாற்றி விடுகிறார்.

இப்படி மோசடி வேலைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் அரசின் கண்பார்வையில் சிக்கி தண்டனையும், அபராதமும் பெற்று விடக் கூடாது எனக் கருதினார்.

உடனே தனது நிறுவனத்தை கலைத்துவிட்டு அரசியலுக்குள் காலடி வைத்துவிட்டார். இங்கு தனது பெயரை ரெட்டி என சேர்த்து கொண்டிருக்கிறார். இது ஒரு நல்ல பீஸ். யாரு வேண்டுமானாலும் அடிக்கலாம்.

இந்த வீடியோவின் அடுத்த பார்ட் விரைவில் வெளிவர உள்ளது என்று கூறி அந்த வீடியோவை நிறைவு செய்கிறார் மாரிதாஸ்.

https://twitter.com/MaridhasAnswers/status/1622968232591376389?s=20&t=tFt6B95gAUr4lkfFySDbCQ

இந்நிலையில், நல்ல மனிதர்கள், பெரியவர்கள் பலர் கேட்டுக் கொண்டதால் விரோதம் விட்டு விலகி ஆளும் திமுக அரசுக்கு எதிரான என் பணியைத் தொடர விரும்புகிறேன் என்றும்,

ஈரோடு இடைத்தேர்தலில் கவனம் செலுத்துவோம். திமுக கூட்டணி தோல்வியைத் தழுவ வேண்டியது அவசியம் என்று ட்விட்டர் பதிவை இன்று வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/MaridhasAnswers/status/1623320169513885698?s=20&t=tFt6B95gAUr4lkfFySDbCQ

பக்கா 420 அரசியலில் குதித்த ரகசியம் என்று வீடியோவை நேற்று வெளியிட்டு விட்டு இன்று அமர் பிரசாத் எதிர்ப்பில் இருந்து விலகுவதாக மாரிதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பாஜக மற்றும் அண்ணாமலையின் மிரட்டலுக்கு பணிந்தாரா மாரிதாஸ் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

தமிழ்நாட்டு வேலை தமிழருக்கே: அஞ்சல் துறைக்கு எச்சரிக்கை விடுத்த வேல்முருகன்

உற்சாகத்தில் ரசிகர்கள்: வெளியானது ’வாத்தி’ ட்ரெய்லர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share