பாஜக கொடி கம்பம் அகற்றப்பட்ட விவகாரத்தில் பதிவான வழக்கில் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட நான்கு பேரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பனையூர் அருகே உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடு முன்பு பாஜக கொடி கம்பம் வைக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அமர் பிரசாத் ரெட்டி. அவரை ஐந்து நாள் காவலில் எடுத்த விசாரிக்க அனுமதி கேட்டு போலீஸ் தரப்பில் ஆலந்தூர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தரப்பு, அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் வாதிட்டது.
இருதரப்பு வாதங்களையும் இன்று (அக்டோபர் 30) விசாரித்த நீதிபதி சந்திரபிரபா, அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட நான்கு பேரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.
அதுபோன்று அமர் பிரசாத் ரெட்டிக்கு மூச்சுத் திணறல் பிரச்சனையும் ரத்தக் கொதிப்பும் இருப்பதால் அவருக்குச் சரியான நேரத்தில் மாத்திரைகள் மற்றும் உடைகள் மாற்ற அனுமதி வழங்க வேண்டும் என்று அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்று, அமர் பிரசாத் ரெட்டிக்கு மாத்திரைகள் மற்றும் உடைகள் வழங்க அனுமதி அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பசும்பொன்னில் எடப்பாடிக்கு எதிராக கோஷம் : டிடிவி தினகரன் சொன்ன பதில்!
பசும்பொன்னில் எடப்பாடிக்கு எதிராக கோஷம் : டிடிவி தினகரன் சொன்ன பதில்!