amar prasad reddy jail torture

சிறையில் காவல்துறையினர் என்னை மிரட்டினர்: அமர்பிரசாத் ரெட்டி

அரசியல்

என் மீது நிறைய வழக்குகள் போடப்போவதாக காவல்துறையினர் சிறையில் வைத்து என்னை மிரட்டினர் என்று பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி இன்று (நவம்பர் 11) தெரிவித்துள்ளார். amar prasad reddy jail torture

பனையூரில் பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து புழல் சிறையிலிருந்து அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பாஜக நிர்வாகிகள் இன்று விடுவிக்கப்பட்டனர்.

பின்னர் பாஜக தலைமை அலுவலகம் சென்ற அமர்பிரசாத் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“பாஜக தொண்டனை சிறையிலிருந்து வெளியே கொண்டு வருவதற்காக தலைமை கடுமையாக சட்டப்போராட்டத்தை நடத்தியுள்ளது. இன்று நான் வெளியே வரமுடியுமா என்று தெரியவில்லை. நேற்று இரவு 11.30 மணிக்கு நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் சூரிட்டி கொடுத்து வெளியே கொண்டுவந்துள்ளனர்.

சட்டத்தில் உண்மைக்கும் தர்மத்திற்கும் வெற்றி உண்டு. பாஜகவை ஒடுக்குவதன் மூலம் தமிழகத்தில் திமுகவுக்கு எதிர்க்கட்சி பாஜக தான் என்பது தெரியவந்துள்ளது.

காவல்துறை என்னை டார்ச்சர் செய்வதற்காக பிளாக் 3 செல் 2-ல் அடைத்தனர். கொலை, கஞ்சா சப்ளை செய்யும் கைதிகள் தான் அதிகளவில் அங்கு இருந்தனர்.

என்னுடன் கைது செய்யப்பட்ட ஐந்து தொண்டர்களையும் ஜெயிலில் சந்திக்க முடியவில்லை. என் குடும்பத்தினரை ஜெயிலில் பார்க்கவிடவில்லை.

நான் ஊழல் செய்து ஜெயிலுக்கு செல்லவில்லை. கட்சிக்காக, கொள்கைக்காக சிறைக்கு சென்றேன். மக்கள் பணத்தை கொள்ளையடித்தவரும் அதே ஜெயிலில் தான் உள்ளார்.

22 வருட அரசியல் அனுபவங்களில் என்ன கற்றுக்கொள்ள முடியுமோ, அதனை 22 நாட்கள் சிறை அனுபவத்தில் கற்றுக்கொண்டேன். 2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்போம். என் குடும்பத்திற்கு தைரியம் கொடுத்தது அண்ணாமலை தான்.

என் மீது நிறைய வழக்குகள் போடப்போவதாக ஜெயிலில் காவல்துறையினர் மிரட்டினர். என்னுடைய அரசியல் மிக தீவிரமாக இருக்கும். 22 நாட்களாக எனக்கு மருத்துவ உதவிகள் தரவில்லை. ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஜெயிலில் நிறைய சலுகைகள் கொடுக்கிறார்கள். சிறையில் கஞ்சா சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு புழல் சிறை சிசிசிடிவியை வெளியிடுவார்களா?” என்று கேள்வி எழுப்பினார். amar prasad reddy jail torture

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ரவுடி கருக்கா வினோத் மீது குண்டாஸ் பாய்ந்தது!

பட வாய்ப்பு அமையவில்லை: மேலாளரை மாற்றும் பிளாக்பஸ்டர் பட நடிகை!

BiggBossTamil7: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது இவர் தான்!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0