amanatullah khan ed

ஆம் ஆத்மி எம்எல்ஏ அமலாக்கத் துறையால் கைது!

அரசியல் இந்தியா

அமலாக்கத் துறை இன்று(செப்டம்பர் 2) காலை டெல்லி சட்டமன்ற உறுப்பினர் அமானத்துல்லா கானை பண மோசடி வழக்கில் கைது செய்தது.

அமானத்துல்லா கான் தில்லி வக்ஃப் வாரியத்தின் தலைவராக இருந்தபோது, வக்ஃப் வாரியம் ஊழியர்களை நியமிப்பதிலும் மற்றும் வக்ஃப் சொத்துகளை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. இதன் தொடர்ச்சியாகத்தான் அவரை இன்று காலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

முன்னதாக , தனது எக்ஸ் தளப்பக்கத்தில் இன்று காலை அமானத்துல்லா கான் ஒரு காணொலி பதிவிட்டிருந்தார்.

அதில் அவர், “இன்று அதிகாலை 7 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் எனது வீட்டுக்கு ரெய்டு நடத்துவதற்கான உத்தரவை வைத்துக்கொண்டு என்னைக் கைது செய்ய வந்துள்ளனர்.

இவர்கள் எனக்கு முன்பு அளித்து வந்த அறிக்கைகள் அனைத்திற்கும் நான் பதிலளித்துள்ளேன். இவர்களது நோக்கமே என்னை கைது செய்வதுதான்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மத்திய அரசு என்னையும் என் கட்சியையும் பணி செய்யவிடாமல் தொல்லை கொடுத்து வருகிறது. இவர்களது நோக்கம் என்னையும் எனது கட்சியான ஆம் ஆத்மி கட்சியையும் உடைப்பதுதான்.

சிறை செல்வதற்கு நான் தயார், எனக்கு எந்த பயமும் இல்லை. நான் குற்றமற்றவன் என்று நீதிமன்றத்தில் நிரூபித்து விடுதலை ஆவேன் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று பேசியுள்ளார்.

அம் ஆத்மி எம்.எல்.ஏ.வின் கைது காரணமாக அவரது  வீட்டைச் சுற்றி டெல்லி காவல் துறை அதிகாரிகள் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அமானத்துல்லா கைதை ஆம் ஆத்மி கட்சியினர் கண்டித்துள்ளனர்.

இதுகுறித்து சிறையிலிருந்து சமீபத்தில் வெளியான ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த டெல்லி சட்டமன்ற உறுப்பினர் மனீஷ் சிசோடியா தனது எக்ஸ் தளப்பக்கத்தில் “பாஜகவுக்கு எதிராக எழும் குரல்களை நசுக்கி, அவர்களை சிறையில் அடைப்பதுதான் அமலாக்கத்துறைக்கு இருக்கும் ஒரே வேலை” என்று பதிவிட்டுள்ளார்.

டெல்லி வக்ஃப் வாரியத் தலைவராக அமானத்துல்லா கான் இருந்தபோது, பணி நியமனத்திற்காகப் பணம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அமலாக்கத் துறை அவரை கைது செய்துள்ளது.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

Paralympics 2024: ஆதிக்கம் செலுத்தும் தமிழர்கள்… ஒரே நாளில் 7 பதக்கங்களுக்கு குறி!

கோட்… டிக்கெட் விலை 500 முதல் 1000 ரூபாயா?

“வலியை பேசும் வாழை” : சான் பிரான்சிஸ்கோவில் படம் பார்த்த ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *