ஏக்நாத் ஷிண்டே அணிக்கு புதிய சின்னம்!

அரசியல்

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2 பிரிவாக செயல்பட்டு வருகிறது.

நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தவ் தாக்கரே அணி சார்பில் ருதுஜா லட்கே போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரேவுக்கு வில், அம்பு சின்னத்தை ஒதுக்கக் கூடாது என ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்தில் முறையிட்டது. இதனால் தேர்தல் ஆணையம் சிவசேனாவின் பெயர், வில், அம்பு சின்னத்தை அக்டோபர் 8 ஆம் தேதி முடக்கியது.

மேலும் 2 தரப்பினரும் வேறு பெயர், சின்னத்துடன் செயல்பட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

ஷிண்டே தரப்பினர் 3 சின்னம், பெயர்களை தேர்வு செய்து அதில் ஒன்றை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

maharastra eknath shinde sivasena swords shield

இதில் கடாயுதம், முரசு, வாள் ஆகிய 3 இல் ஒரு சின்னத்தையும், பால்தாக்கரே மற்றும் சிவசேனா வருமாறு 3 பெயர்களையும் சமர்ப்பித்திருந்தனர்.

இதனை பரிசீலித்த தேர்தல் ஆணையம், ஷிண்டே அணிக்கு பாலாசாகேபஞ்சி சிவசேனா என்ற பெயரை ஒதுக்கி ஷிண்டே அணியினர் கோரிய 3 சின்னங்களையும் நிராகரித்தது. புதிய சின்னங்களின் பட்டியலை அளிக்கும்படி கோரியது.

அதன்படி சின்னம் தொடர்பாக விருப்ப சின்னங்களின் புதிய பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டது. அரசமரம், வாள், சூரியன் ஆகிய 3 சின்னங்களை விருப்பமாக கோரி தேர்தல் ஆணையத்தில் ஏக்நாத் ஷிண்டே அணி முறையிட்டிருந்தது. இதனை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், இரட்டை வாள் மற்றும் கேடயத்தை சின்னமாக இன்று (அக்டோபர் 11) ஒதுக்கியுள்ளது.

உத்தவ் தாக்கரே அணிக்கு சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) என்ற பெயரும், ‘தீபச் சுடர்’ சின்னமும் நேற்று (அக்டோபர் 10) ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மான நஷ்டவழக்கு: வாபஸ் வாங்கிய எஸ்.பி.வேலுமணியின் நண்பர்!

மதவாதத்தை முறியடிப்போம்: மனித சங்கிலி போராட்டம்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *