முதல்வர் மு.க.ஸ்டாலின் தனிச் செயலாளர்களாக 4 பேர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு பல்வேறு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் முதன்மைச் செயலாளராக இன்று (ஆகஸ்ட் 20) நியமிக்கப்பட்டுள்ள உமாநாத் ஐஏஎஸ்-க்கு நிதி, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு, எரிசக்தி, உள்துறை, தொழில் மற்றும் மூதலீட்டு ஊக்குவிப்பு, நீர்வளத்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள், நகராட்சி நிர்வாகம், இயற்கை வளம், பொதுப்பணித்துறை, விஜிலென்ஸ் கமிஷன், ஆகிய 13 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வரின் தனிச் செயலாளர் (s2) சண்முகத்திற்கு வேளாண்மை, உணவு, முதல்வரின் அலுவலக நிர்வாகத்துறை, உயர்க்கல்வி, வீட்டுவசதி, சட்டத்துறை, ஊரகவளர்ச்சித்துறை, தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை ஆகிய 12 துறைகள் ஒதுக்கீடு செயப்பட்டுள்ளது.
முதல்வரின் தனிச் செயலாளர் (s3) அனு ஜார்ஜ்க்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், கால்நடைத்துறை, பால் மற்றும் மீன் வளம், சிறுபான்மை நலம் மற்றும் முதல்வர் அலுவல் பயணம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், வனத்துறை, மக்கள் நல்வாழ்வு துறை, சிறு, குறு தொழில்துறை, பள்ளிக்கல்வித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாடு, மாற்றுத்திறனாளி நலன், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜி.லட்சுமிபதிக்கு கைத்தறி, துணிநூல் மற்றும் காதி, தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைகள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு, சிறப்பு திட்ட செயலாக்கம், சமூக பாதுகாப்பு, திட்டம் மற்றும் வளர்ச்சி, போக்குவரத்து, சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சமய அறநிலையத்துறை ஆகிய 9 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கழிவறை , உடை மாற்றும் அறை கூட நடிகைகளுக்கு கிடையாது : அதிர வைக்கும் ஹேமா அறிக்கை
லேட்டரல் என்ட்ரி… சமூகநீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்: ஸ்டாலின் குற்றச்சாட்டு!