அதிமுகவின் வேட்பாளருக்கான ஏ மற்றும் பி படிவங்களில் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.
பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் எடப்பாடி அணியும் ஓபிஎஸ் அணியும் வேட்பாளர்களை களம் இறக்கினர்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் ஒருமித்த வேட்பாளரை தேர்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து பொதுக்குழு உறுப்பினர்களிடம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், ஆதரவு கடிதம் பெற்றார். அந்த கடிதங்களை இன்று (பிப்ரவரி 6 )தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியுள்ளது. மேலும் அதிமுகவின் வேட்பாளருக்கான A மற்றும் B வடிவங்களில் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
விக்டோரியா கெளரி நியமனம் : முதல்வருக்கு வைகோ கடிதம்
”நம்முடைய அண்ணன் ஓபிஎஸ்” – செங்கோட்டையன் திடீர் பாசம்!