இந்தியா கூட்டணிக்கு மேற்கு வங்காளம், பஞ்சாப், பீகாரில் இருந்து அடுத்தடுத்து அதிர்ச்சிகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் உத்தரபிரதேசத்தில் இருந்து ஆறுதல் செய்தி வந்துள்ளது.
உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் காங்கிரசுடன் சில தொகுதிகளில் உடன்பாடு ஏற்பட தொடங்கி இருப்பதாக ஒரு தகவலை இன்று ஜனவரி 27 வெளியிட்டு இருக்கிறார்.
இன்று அவர் தனது எக்ஸ் சமூக தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “காங்கிரஸ் உடனான எங்களது கூட்டணி 11 ஸ்ட்ராங் தொகுதிகளில் உடன்பாடு என்கிற நல்லதொரு தொடக்கத்தை எட்டி உள்ளது. வெற்றி வாய்ப்பு என்ற அடிப்படையில் இந்த உடன்பாடு நிலவரம் இன்னும் முன்னேற்றத்தை அடையும்” என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
कांग्रेस के साथ 11 मज़बूत सीटों से हमारे सौहार्दपूर्ण गठबंधन की अच्छी शुरुआत हो रही है… ये सिलसिला जीत के समीकरण के साथ और भी आगे बढ़ेगा।
‘इंडिया’ की टीम और ‘पीडीए’ की रणनीति इतिहास बदल देगी।
— Akhilesh Yadav (@yadavakhilesh) January 27, 2024
நாட்டிலேயே அதிகமான 80 எம்பி தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அகிலேஷ் அறிவித்திருப்பது இந்தியா கூட்டணிக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
–வேந்தன்
கருப்புக் கொடி காட்டிய மாணவர்கள் : தர்ணாவில் ஈடுபட்ட ஆளுநர்!
மாட்டிக்கொள்ளாமல் சூப்பர் மார்க்கெட்டில் திருடுவது எப்படி?… ரீல்ஸ் போட்டு சிக்கிய இளைஞர்கள்