அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
அதிமுக இரண்டு அணியாக பிரிந்துள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில் இன்று (ஆகஸ்ட் 17) காலை 10.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கவுள்ளார்.
தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வருமா, இல்லை பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக வருமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக இரு தரப்புமே சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கின்றன.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக தொடர் பயணத்தில் இருந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த பயணத்தின் போது பூச்சி கடித்து அவருக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் மருத்துவமனைக்கு போனால் நாடகம் என்று சொல்வார்கள் என்று கருதிய எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரியா
டிஜிட்டல் திண்ணை: ஆளுநர் விருந்தை புறக்கணித்த எடப்பாடி: பாஜக எதிர்ப்பின் ஆரம்பம்!