தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மிக சிறப்பாக பணியாற்றி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அகிலேஷ் யாதவ் புகழ்ந்து பேசியுள்ளார்.
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (மார்ச் 1 ) பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
இதில்,காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், “ தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மிக சிறப்பாக பணியாற்றி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 14 வயதில் கோபாலபுரத்தில் இளைஞர் அணியை தொடங்கியவர் மு.க.ஸ்டாலின்.
1976-ல் அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து போராடி சிறை சென்றவர் மு.க.ஸ்டாலின். விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் உள்ளவர். பதவியேற்ற ஒரு வருடத்திலேயே 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கியுள்ளது திமுக அரசு.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற சிறப்பான திட்டம் மூலம் மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண்கிறார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து துணை நின்றவர் முதலமைச்சர் என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சரவணா ஸ்டோர்ஸில் தீ விபத்து: ஒரு மணி நேரமாக போராடும் தீயணைப்பு வீரர்கள்!
தொடங்கியது ஸ்டாலினின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!