ஏர்போர்ட் அப்டேட்!

அரசியல்

சென்னை விமான நிலையத்துக்கு இன்று (ஜூலை 30) வருகை தரும் மற்றும் இங்கிருந்து புறப்படும் முக்கிய விஐபிகள் குறித்து இங்கு பார்ப்போம்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி 10.30மணிக்கு இங்கிருந்து பெங்களூருவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 10.50 மணிக்குச் சென்னையிலிருந்து கொச்சி செல்கிறார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியிலிருந்து பகல் 12.40 மணிக்கு சென்னை வருகிறார்.

கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூரிலிருந்து பிற்பகல் 12.10 மணிக்கு சென்னை வருகிறார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம் பி. காலை 8.35 மணிக்குக் கோவை புறப்பட்டுள்ள நிலையில் மாலை 5 மணிக்குக் கோவையிலிருந்து சென்னை வருகிறார்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி காலை 11.30 மணிக்கு மதுரைக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

சென்னை வரும் நிர்மலா சீதாராமன் இரவு 9 மணிக்கு டெல்லி புறப்படுகிறார்.

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.