அதிமுக கலவரம்: ஓபிஎஸ் ஆதரவாளரிடம் சிபிசிஐடி விசாரணை!

அரசியல்

அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக வழக்கு விசாரணைக்கு சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்று ஆஜரானார்.

ஜூலை 11ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வாசலில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம், அதிமுக மாசெ ஆதிராஜாராம், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் பாபு, ராயப்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் என 4 பேர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் தனித்தனியாகப் புகார் அளித்திருந்தனர்.

இந்த 4 புகார்களும் வழக்குகளாகப் பதிவுசெய்யப்பட்டு பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடியிலும் புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர்.

இதன் விசாரணை அதிகாரியாக கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி, டி.எஸ்.பி. வெங்கடேசன் நியமிக்கப்பட்டதுடன், அவருக்குக் கீழ் 4 காவல் ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இதன் முதற்கட்டமாக அதிமுக தலைமை அலுவலகத்தின் அலுவலர் மகாலிங்கம் கடந்த செப்டம்பர் 14ம் தேதி சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் புகார் அளித்த அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் நேற்று (செப்டம்பர் 17) சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்று (செப்டம்பர் 17) சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதுதொடர்பாக அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. அவருடைய பதில்களை சிபிசிஐடி அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாகப் பெற்றிருக்கின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக இருதரப்பிலும் மாறிமாறி புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன்பேரில் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிபிசிஐடியின் விசாரணையால் அதிமுக அலுவலக வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

ஜெ.பிரகாஷ்

அதிமுக அலுவலகத்தில் மீண்டும் சிபிசிஐடி: விசாரணை விவரம்!

பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் மா.சு. பதில்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *