பாஜக தமிழகத்தில் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றால், தேசியக் கட்சிகளுக்கே உரிய மேனேஜர் பட்டத்தை உடைத்து, தலைவர்கள் இந்தக் கட்சியில் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையை மக்களுக்கு கொடுத்தால், கட்சி தானாகவே வளரும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று (மார்ச் 7 ) பேசியிருந்தார்.
இந்நிலையில், பாஜகவின் கிளை மேலாளரை போல அண்ணாமலை செயல்படுவதாக அதிமுக செய்தித்தொடர்பாளர் கோவை சத்யன் கூறியுள்ளார்.
அவர் இது குறித்து இன்று (மார்ச் 8 ) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ஒன்றரைக்கோடி தொண்டர்களால் ஜெயலலிதா தலைவரானார் என்றும் அதேபோல தான் கலைஞரும் தலைவரானார் என்றும் மேலும் , கார்பரேட் நிறுவனமான பாஜக வின் கிளை மேலாளரைப்போல் இருப்பவரே அண்ணாமலை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தமிழ்நாடு பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவரான அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ” தலைவர் என்பவர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார் என்பது முக்கியமல்ல எப்படி செயல்படுகிறார் என்பதுதான் முக்கியம்.
நேர்மைக்குச் சொந்தக்காரராகவும், பித்தலாட்டத்துக்கு துணை போகாதவராகவும் இருக்கும் முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு, திராவிட இயக்கத்தவர்களின் சான்றிதழ் ஒரு நாளும் தேவையில்லை என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஓட்டுநர்களுக்கு ரூ.1000 நிவாரணம்? – தமிழ்நாடு அரசு பதில்!
பணம் கையில் வந்தால்தான் நிஜம்… அனுபவத்தைச் சொன்ன செல்வராகவன்