ஆளுநர் மாளிகையில் பன்னீரோடு நெருக்கம் காட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள்!

அரசியல்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்கள் கொஞ்சி குலாவி நலம் விசாரித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்ற 33-வது தலைமை நீதிபதி எஸ்வி கங்காபூர்வாலாவிற்கு கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவி இன்று (மே 28) பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவில் திமுக அமைச்சர்கள் துரைமுருகன், கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு, மா சுப்பிரமணியன், சேகர்பாபு, உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பெஞ்சமின் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

காலை 9.30 மணிக்கு வளர்மதி பெஞ்சமின் ஆகியோர் ஆளுநர் மாளிகைக்கு வந்தனர். அவர்களை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வந்தபோது வளர்மதி ஓடிப்போய் “அண்ணா எப்படி இருக்கீங்க… உடம்பு எப்படி இருக்கிறது, கேரளாவில் ட்ரீட்மென்ட்ல இருந்ததா சொன்னாங்க…” என்று நலம் விசாரிக்க, அடுத்ததாக வந்த பெஞ்சமினும் ஓ.பன்னீர் செல்வத்தை நலம் விசாரித்தார். இதைப் பார்த்த திமுக அமைச்சர் சேகர்பாபு சிரித்தபடி நகர்ந்து சென்றார். அதனை தொடர்ந்து திமுக அமைச்சர்களும் ஓ.பன்னீர் செல்வத்தை நலம் விசாரித்தனர்.

வணங்காமுடி

”எம்.பி.க்களின் எண்ணிக்கை உயரும்”: புதிய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி

‘மக்களுக்கான கல்விக் கொள்கையே சமத்துவத்தை உருவாக்கும்’: ஜவஹர் நேசன்

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *