விஜயகாந்த் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல்: பிரேமலதா உருக்கம்!

அரசியல் தமிழகம்

அதிமுக கூட்டணியில்  உள்ள அனைவரும் மார்ச் 25ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளோம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இன்று (மார்ச் 21) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், நேற்றைய தினம் அதிமுகவுடனான கூட்டணியை உறுதி செய்தது தேமுதிக.

இதனைத் தொடர்ந்து, இன்று அதிமுக சார்பில் இறுதி  வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

பின்னர், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

அதன்பின், தேமுதிக பொதுச்செயலாளர், அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் சில நிர்வாகிகளும் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,

“மார்ச் 24ஆம் தேதி அதிமுக கூட்டணி சார்பில் திருச்சியில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளராகிய நானும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் நிச்சயமாகப் பங்கேற்கிறோம்.

இந்த பொதுக்கூட்டத்தில் 40 தொகுதியிலும் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்கிறார்.

அதனைத் தொடர்ந்து, அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரம் தொடங்கும். எனவே இந்த அதிமுக கூட்டணியில் ஒற்றுமையாக, கூட்டணி தர்மத்துடன் செயலாற்றி,

‘நாளை நமதே; நாற்பதும் நமதே’ என்று வெற்றி ஒன்றையே இலக்காகக் கொண்டு, நல்ல புரிதலுடன் நாங்கள் பயணிக்க இருக்கிறோம்.

தேமுதிக கட்சி கேப்டன் விஜயகாந்த் இல்லாமல் சந்திக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இது.

அதனால், இந்த கூட்டணி 2011 தேர்தலில் எப்படி வெற்றி கூட்டணியாக இருந்ததோ, அந்த சரித்திரம் நேற்றிலிருந்து தொடங்கிவிட்டது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா, புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் ஆகியோரின் நல்லாசியுடன் இந்த கூட்டணி அமோக வெற்றி பெறும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை அமலாக்கத்துறை ரெய்டு, வருமான வரித்துறை ரெய்டு என்பதை நாம் தினந்தோறும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

ரெய்டு என்பது அரசியலில் இருப்பவர்களுக்குக் கட்டாயமாக நடக்கும் ஒரு விசயம். இதையெல்லாம் எதிர்கொள்ளத் தைரியம் உள்ளவர்கள் தான் அரசியல் உள்ளே வரமுடியும்.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பட்டியல் விரைவில் வெளியிடப்படும். தற்போது, வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது.

அதிமுக கூட்டணியைச் சேர்ந்த அனைவரும் மார்ச் 25ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம். வேட்புமனு தாக்கல் செய்தவுடன் நேரடியாகக் களத்திற்குச் சென்று நாங்கள் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளோம்.

என்.டி.ஏ. கூட்டணி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான். ஆனால், தேமுதிக நிர்வாகிகள் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கருதியதால் தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்து

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

 

தீவிரமடையும் குட்கா வழக்குகள்..அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்குக் குறிவைத்த சிபிஐ!

Rain Update: இந்த மாவட்டங்களுக்கு… இடி, மின்னலுடன் மழையும் உண்டு!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 thought on “விஜயகாந்த் இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தல்: பிரேமலதா உருக்கம்!

  1. யாம்மா….. விஜயகாந்த் இல்லாம போனதுக்கு காரணமே அந்த அதிமுகதான்னு தியாகு சொல்றாரு…. உண்மையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *