அதிமுகவில் இடைச்செருகல்களை நீக்க வேண்டும்: பண்ருட்டி ராமச்சந்திரன்

அரசியல்

அதிமுகவில் இடைச்செருகல்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரைக் குறிப்பிடாமலே கடுமையாக விமர்சித்துள்ளார் பண்ருட்டி ராமச்சந்திரன்.

சென்னை ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் இன்று காலை பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், ஓபிஎஸ் அணி மா.செ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 88 மாவட்ட செயலாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், “எம்.ஜி.ஆர். தொடங்கிய இந்த மாபெரும் இயக்கத்தை காப்பாற்ற வேண்டும். உழைப்போரை உயர்த்துவதற்காக தொடங்கப்பட்டது இந்த இயக்கம்.

காப்பியங்களில் செய்யுட்கள் வரும். அதை இயற்றியவர் ஆரம்பக்கால புலவராக இருப்பார். உதாரணத்துக்கு கம்பராமாயணாத்தை எடுத்துக்கொள்வோம். உடனே இதை இயற்றியது சேக்கிழார் என்று அவசரப்பட்டு சொல்லிவிடாதீர்கள்.

இப்படியெல்லாம் தமிழ்நாட்டில் தற்குறிகள் இருப்பார்கள் என்று கருதியோ என்னவோ, ராமாயணத்தை ராமாயணம் என்று போடாமல் கம்பராமாயணம் என போட்டார்கள். கம்பர் எழுதினார் என்று நினைவு வரட்டும் என்பதற்காக.

அந்த கவிதைகளில் இடைசெருகல் என்று உண்டு. கம்பர் எழுதிய காப்பியத்தில் இடையில் வருகிற புலவர்கள் சிலநேரம் அவர்களது கவிதைகளை எழுதிச் செருகிவிடுவார்கள். அதில் வித்தியாசம் தெரியும்.

அதைக் கற்றறிந்த புலவர்கள் இடைச்செருகல்களை நீக்கிவிட்டு காப்பியத்தைக் காப்பாற்றுவார்கள்.

இது இலக்கியத்துக்கு மட்டுமல்ல, இயக்கத்திலும் இடைச்செருகல்கள் வந்துவிட்டது.

அவற்றை அப்புறப்பற்றினால் தான் இயக்கத்தைக் காப்பாற்ற முடியும்” என்று எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாகச் சாடினார்.

பிரியா

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது!

ரூ.41 ஆயிரத்தை எட்டிய தங்கம் விலை!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.