அதிமுக கலவர வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

அரசியல்

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் மற்றும் ஆவணங்கள் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பால் பொதுக்குழு கூட்டப்பட்ட அன்று, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்றனர்.

அலுவலகத்தை எடப்பாடி தரப்பினர் பூட்டிச் சென்றுவிட்டதால் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது அங்கு சென்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்களுக்கும் பன்னீர் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனால் அதிமுக தலைமை கழகமே போர்க்களமானது. இதுதொடர்பாக உதவி ஆய்வாளர் காசுப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், 400க்கும் மேற்பட்டோர் மீது கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக தடுத்தல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல்,

பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை காவல் நிலையத்தினர் 4 வழக்குகளை பதிவு செய்தனர்.

இதற்கிடையே அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவை அடுத்து திறக்கப்பட்டது.

இந்த 4 வழக்குகளையும் வேறு அமைப்பிற்கு மாற்றுமாறு அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சி.வி.சண்முகம் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று (ஆகஸ்ட் 25) பிற்பகல் நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, அதிமுக அலுவலக கலவர வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் 19-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கலை.ரா

அதிமுக கலவரம்:ஓபிஎஸ் மீது வழக்குப் பதிவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *