அதிமுக கலவரம்:ஓபிஎஸ் மீது வழக்குப் பதிவு!

அரசியல்

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11-ம் தேதி  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் நடந்தது.

இதுதொடர்பாக எடப்பாடி ஆதரவாளர்கள் 200 பேர், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் என 400 பேர் மீது கலவரத்தை தூண்டுதல், சட்டவிரோதமாக கூடுதல், பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பெரும் மோதல் வெடித்ததால் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

இதையடுத்து நீதிமன்றத்தை நாடிய எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் மீது ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் அதிமுக அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த பன்னீர்செல்வம் கட்சியின் முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றதாகவும், அலுவலக சொத்துக்கு குந்தகம் விளைவித்ததாகவும் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து தனது புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று (ஆகஸ்ட் 25 ) விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கான முதல் தகவல் அறிக்கை அளிக்கப்பட்டது.

கலவரத்தில் ஈடுபடுதல், பயங்கர ஆயுதங்களுடன் வன்முறை செய்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்து இருக்கிறது.

கலை.ரா

அதிமுக அலுவலகம் எடப்பாடிக்கே: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *