பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுமா? நாசர் சொன்ன பதில்!

Published On:

| By Selvam

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கவது குறித்து முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 18) மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஆதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்று வருகிறது.

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும். கால்நடை தீவனங்களுக்கான விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

கே.பி.முனுசாமி பேசும்போது, “கிராம பொருளாதாரத்தில் பால் உற்பத்தி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பால் உற்பத்தியாளர்கள் பண்ணை வைத்து பால் உற்பத்தி செய்வதில்லை.

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு மாடு, எருமை இருக்கும். அதனை வைத்து தான் குடும்ப வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

பால் உற்பத்தி செய்யும் மாடுகளுக்கான தீவனம் கடுமையாக உயர்ந்துள்ளது. கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனத்திற்கான கட்டணத்தை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், “2023-ஆம் ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி வழங்கப்பட்டது.

இதனால் நாள் ஒன்றிற்கு ரூ.1 கோடியே 5 லட்சம் நிதிச்சுமை ஏற்படுகிறது. உறுப்பினர்களின் கோரிக்கைகள் முதல்வரிடம் எடுத்து சென்று அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

இந்தியா முழுவதும் கால்நடைகளுக்கு கழுத்தில் கழலை நோய் ஏற்பட்டது. இதனால் பல லட்சம் மாடுகள் உயிரிழந்தது. தமிழகத்தில் அந்த நோய் மாடுகளுக்கு ஏற்படவில்லை.

இதனால் மாநிலங்கள் தங்களது பால் உற்பத்தியை பூர்த்தி செய்ய தமிழகத்தில் இருந்து கொள்முதல் செய்தது. அவர்களுக்கு ரூ.5 முதல் ரூ.7 வரை கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.

செல்வம்

முதல்முறையாக சர்வதேச அலைச்சறுக்கு போட்டி: உதயநிதி ஸ்டாலின்

“கடற்கரையில் மீன்கள் விற்க அனுமதியில்லை பேனா வைக்க அனுமதியா?” – சீமான் கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment