அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, “அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கைகள் நடைபெறுகிறது. எங்கள் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்க கூடாது. எங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்” என்ற வாதத்தை முன்வைத்தார்.
அவரது வாதத்தை கேட்ட நீதிபதிகள், “தற்போதைய நிலையில் இந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. 20 மற்றும் 21-ஆம் தேதி மதியம் 2.15 மணிக்கு இந்த வழக்கின் விசாரணை நடைபெறும்” என்று தெரிவித்தனர்.
செல்வம்