எம்.ஜி.ஆர் சிலைக்கு அமமுகவினர் போட்ட மாலையை அகற்றிய அதிமுகவினர்: என்ன நடந்தது?

Published On:

| By Kavi

முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவன தலைவருமான எம்.ஜி.ராமச்சந்திரன் பிறந்தநாள் இன்று (ஜனவரி 17).

இதை முன்னிட்டு பிரதமர் மோடி முதல் தவெக தலைவர் விஜய் வரை எம்.ஜி.ஆரை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

சென்னை, கிண்டி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ரகுபதி, தா.மோ.அன்பரசன், சேகர்பாபு, நாசர் ஆகியோர் மாலை அணிவித்து அரசு சார்பில் மரியாதை செலுத்தினர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கட்சி அலுவலகத்துக்கு வந்து எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து, கேக் வெட்டி கொண்டாடினார்.

தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது, இனிப்பு வழங்குவது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என அதிமுகவினர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்ட தலைநகர் மஞ்சக்குப்பத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அமமுகவினர், அதிமுகவினர் மரியாதை செலுத்த வந்தனர்.

காலை 9.30 மணிக்கு அமமுக மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி மாலை அணிவிக்க வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் வருகிறார். அவர் மாலை போட்ட பிறகுதான் நீங்கள் மாலை போட வேண்டும் என்று அமமுகவினருக்கு தடை போட்டனர்.

இதனால் அமமுக மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தியும் 15 நிமிடங்கள் காத்திருந்தார். அப்போதும் எம்.சி சம்பத் வராததால், இனியும் காத்திருக்க முடியாது… நாங்கள் மாலை போடுகிறோம் என்று கூறி மாலை போட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

10 மணிக்கு மாவட்ட செயலாளர் எம்.சி சம்பத் வருகைத் தந்தார். அப்போது அமமுக மாவட்ட செயலாளர் போட்ட மாலையை, மஞ்சக்குப்பம் அதிமுக பகுதிச் செயலாளர் வெங்கட்ராமன் அகற்றிவிட்டார்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தினார்.

அமமுகவினர் காத்திருந்து செலுத்திய மாலையை அதிமுகவினர் அகற்றியதால் அவ்விடத்தில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கு : தேதி குறித்த உச்ச நீதிமன்றம்!

கடற்கரையில் கொத்துக் கொத்தாக மடிந்த பங்குனி ஆமைகள்… அரசுக்கு கோரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel