நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றன.
திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது. பாஜக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் அதிமுக ஈடுபட்டு வருகின்றது.
கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டிடுவதற்கான விருப்பமனு விநியோகம் தொடங்கியது.
இந்தநிலையில், அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக விருப்ப மனு இன்று (பிப்ரவரி 21) முதல் விநியோகிக்கப்படுகிறது.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கட்சி நிர்வாகிகள்,
தலைமைக் கழகத்தில் வருகின்ற 21.2.2024 – புதன்கிழமை முதல் 1.3.2024 – வெள்ளிக்கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவங்கள் பொதுத்தொகுதிகளுக்கு ரூ.20,000 மற்றும் தனித்தொகுதிகளுக்கு ரூ.15,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: வேண்டாம் சுகர் ஃப்ரீ – எச்சரிக்கும் WHO – என்ன காரணம்?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
பெயர்ப்பலகைகளில் 60% கன்னட மொழி கட்டாயம்: மசோதா நிறைவேற்றம்!
பிகாரில் இனி 6 மணி நேரம் மட்டுமே பள்ளிகள்: நிதிஷ்குமார் அதிரடி!