சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை (அக்டோபர் 16) மாலை எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
கடந்த 10 ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மா.செக்கள் கூட்டம் நடந்த நிலையில் நாளை சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது.
சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தச் சென்னையில் உள்ள ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை 6 மணிக்கு எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூடுகிறது.
ஏற்கனவே சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஓபிஎஸ் அவசியம் கலந்து கொள்வார் என்ற தகவல் எடப்பாடி பழனிசாமிக்குக் கிடைத்துள்ளது.
அப்படி கலந்துகொண்டால் 17ஆம் தேதி கூடும் சட்டமன்றத்தைப் புறக்கணிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருப்பதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவித்தன. இதுதொடர்பாகவும் நாளை ஆலோசிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
பிரியா
குஜராத்தை தவிர அனைத்து மாநிலங்களிலும் அமுல் பால் விலை உயர்வு!
“சத்யாவுக்கு ஏற்பட்ட துயரத்தை அறிந்து நொறுங்கிவிட்டேன்” – முதல்வர் ஸ்டாலின்