எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் அப்பாவுவை இன்று (அக்டோபர் 9) சந்தித்தனர்.
சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவை அதிமுக கொறடா எஸ்.பி வேலுமணி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.பி உதயகுமார் ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அருகில் எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமாருக்கு இடமளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக செப்டம்பர் 22-ஆம் தேதி அதிமுக சட்டமன்ற கட்சி நிர்வாகிகள் சபாநாயகரை சந்தித்து எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக கடிதம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்