தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அதிமுக சார்பில் இன்று (அக்டோபர் 30) தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி மற்றும் 60-வது குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது.
அதிமுக-வில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் சென்னையிலும், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட தலைமை கழக செயலாளர்கள் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னிலும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவார்கள் என்று ஏற்கனவே அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இன்று சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள், பொன்னையன், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், பா.வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன்னில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தேவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
செல்வம்
புத்திசாலியிடம் ட்விட்டர் : ட்ரம்ப்