அதிமுக ஆலோசனைக்கூட்டம்: ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அழைப்பு!

அரசியல்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமான பிறகு பல அணிகளாக கட்சி உடைந்திருக்கிறது. பொதுக்குழு நடத்தி இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தன்னை அறிவித்துக் கொண்டார்.

இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவில், சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு தொடர்பாக இரண்டு தீர்ப்புகளை வழங்கியது. தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்றும், இரண்டு நீதிபதிகள் நீதிபதிகள் செல்லும் என்றும் தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து, பன்னீர், பழனிசாமி இருவரும் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது, அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ திருமண மண்டபத்தில் வரும் 21 ஆம் தேதி காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது.

அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

கலை.ரா

கோமாரி நோய்: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!

“விருப்பமில்லாத திருமணத்தை பதிவு செய்தால் புனிதமாகிவிடாது” – உயர் நீதிமன்றம்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
2
+1
1

Leave a Reply

Your email address will not be published.