திருக்குறளை மத்திய அரசு தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 32 தீர்மானங்கள் அதிமுக மதுரை மாநாட்டில் இன்று (ஆகஸ்ட் 20) நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்களை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வைகைச்செல்வன், செம்மலை ஆகியோர் மாநாட்டில் வாசித்தனர்
தீர்மானம் 1
மதுரை பொன் விழா மாநாட்டின் வெற்றிக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தல்
தீர்மானம் 2
எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக தொண்டர்களை வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தல்
தீர்மானம் 3
அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க கழக அமைப்பு ரீதியாக பணியாற்றிய மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தல்
தீர்மானம் 4
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
தீர்மானம் 5
தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழ் மொழியை கட்டாய பாட மொழியாக்கவும் பயிற்று மொழியாக்கவும் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
தீர்மானம் 6
அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து அட்டவணை மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழிகளாக கொண்டு வர மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
தீர்மானம் 7
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை புதுச்சேரி மாநிலம் என்று நிலை உயர்த்த மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
தீர்மானம் 8
அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு மூடு விழா நடத்தும் திமுக அரசுக்கு கண்டனம்
தீர்மானம் 9
வரிச்சுமை, மின்கட்டண உயர்வை மக்கள் மீது திணிக்கும் திமுக அரசுக்கு கண்டனம்
தீர்மானம் 10
ஏழை எளிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசுக்கு கண்டனம்
தீர்மானம் 11
கொலை, கொள்ளை, வழிப்பறி, கள்ளச்சாராயம், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு காரணமாக திமுக அரசுக்கு கண்டனம்
தீர்மானம் 12
அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமை தொகை வழங்காத திமுக அரசுக்கு கண்டனம்
தீர்மானம் 13
இரண்டு ஆண்டுகளில் 3 லட்சம் கோடி கடன் வாங்கி இந்தியாவிலேயே கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகத்தை முதல் மாநிலமாக்கிய திமுக அரசுக்கு கண்டனம்
தீர்மானம் 14
தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம்
தீர்மானம் 15
மேக தாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை கண்டிக்காமல் காங்கிரஸ் கட்சியின் பதவியேற்பு விழாவிற்கு சென்ற மு.க.ஸ்டாலினுக்கு கண்டனம்
தீர்மானம் 16
தமிழ்நாட்டிற்கு தேவையான கச்சத்தீவை மீட்டெடுக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை துரிதப்படுத்த திமுக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
மேலும், இஸ்லாமிய சிறை வாசிகளை விடுதலை செய்ய எந்தவித முயற்சியையும் எடுக்காத திமுக அரசுக்கு கண்டனம், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
செல்வம்