aiadmk jayakumar says bjp alliance

கூட்டணி முறிவு நிலைப்பாட்டில் மாற்றமில்லை: ஜெயக்குமார்

அரசியல்

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று எடுத்த நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக, பாஜக கூட்டணி மோதல் நீடித்து வரும் நிலையில் டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை அதிமுக மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் செப்டம்பர் 22-ஆம் தேதி டெல்லியில் சந்தித்தனர். இந்தசூழலில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

இந்தநிலையில் சென்னை எழும்பூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. அதிமுக குறித்து மட்டும் ஊடகங்கள் விவாதித்து வருகின்றன. டெங்கு, கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடாதது, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கலாம்” என்றார்.

அதிமுக மூத்த உறுப்பினர்கள் ஜேபி நட்டா, பியூஷ் கோயலை சந்தித்து தமிழக பிரச்சனைகள் குறித்து பேசினார்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் இப்போது எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது” என்று ஜெயக்குமார் கூறினார்.

செல்வம்

நிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரம்!

பள்ளி சீரமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்: காரணம் என்ன?

தொடக்க கல்வி பட்டய தேர்வு முடிவுகள் எப்போது?

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *