பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான சீண்டல்கள், குற்றங்களுக்கு கடுமையான தண்டனை அளிப்பதற்கு கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் முதல்வர் சட்டத் திருத்தமே கொண்டுவந்து நிறைவேற்றினார். aiadmk house owner torture
இதற்குப் பிறகும் சிலர் அச்சப்படாமல் பெண்களுக்கு எதிரான பாலியல் விவகாரங்களில் ஈடுபடுகின்றனர். இந்த வகையில் அதிமுக பிரமுகர் ஒருவரை கைது செய்து இன்று (ஜனவரி 30) சிறையில் அடைத்திருக்கிறது போலீஸ்.

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்படப்பை பகுதியில் வசித்து வருபவர் பொன்னம்பலம். 60 வயதான இவர் அதிமுகவில் குன்றத்தூர் ஒன்றிய அதிமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
வில்லனாக மாறிய பொன்னம்பலம் aiadmk house owner torture
இவருடைய வீட்டில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் இளம் பெண்கள் வாடகைக்கு குடியிருந்துள்ளனர். தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து இங்கே வந்து வேலை செய்யும் தனது மகள் வயதிலான பெண்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய பொன்னம்பலமே, அவர்களுக்கு வில்லனாக மாறிவிட்டார்.

தன்னுடைய வீட்டில் குடியிருந்த பெண்களை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்திருக்கிறார். இதனால், ‘துஷ்டனை கண்டால் தூர விலகு’ என்ற அடிப்படையில் அந்த பெண்கள், பொன்னம்பலத்தின் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்துக்கு சென்று வசித்தனர்.
ஆனால், அப்படியும் விடாமல் அந்த பெண்களை தொடர்ந்து செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். மேலும், அவர்கள் புதிதாக குடியிருக்கும் வீட்டுக்கும் இன்று (ஜனவரி 30) சென்ற அதிமுக நிர்வாகி பொன்னம்பலம் அவர்களை மிரட்டியுள்ளார்.

இன்று காலை தாங்கள் வசித்த வீட்டுக்கு வந்த பழைய ஹவுஸ் ஓனர் பொன்னம்பலத்தை கீழே தள்ளிய அந்த பெண்கள்… அவரைச் சுற்றிலும் நின்று துடைப்பக்கட்டையால் அடித்து விரட்டினர். சுற்றிலும் பெண்கள் நின்று துடைப்பக்கட்டையால் அடித்ததும், ‘வயசு பொண்ணுங்க இருக்குற ரூமுக்கு வந்தது என் தப்பு தான்’ என்று கூறுகிறார் அந்த ஹவுஸ் ஓனர். அவரை விரட்டி வெளியே தள்ளி கதவை சாத்தும் வரை வீடியோவாகவும் எடுத்து வைத்தனர் அந்த பெண்கள்.
இதன்பின் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த வீடியோவோடு மணிமங்கலம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பொன்னம்பலத்தை கைது செய்து தீவிர விசாரண மேற்கொண்டு வந்தனர். பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.போலீசின் இந்த உடனடி நடவடிக்கை அந்த பெண்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. aiadmk house ow
இந்தநிலையில், பொன்னம்பலத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.aiadmk house owner torture