சென்னை அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம் சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 14) ஆஜராகி உள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன்பு ஜூலை 11ஆம் தேதி ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் மோதிக் கொண்டனா்.
இதனால் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்தனர்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம் இன்று சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். ஜூலை 11ஆம் தேதி நடந்த வன்முறை தொடர்பாக அவர் விளக்கம் அளித்து வருகிறார்.
கிறிஸ்டோபர் ஜெமா
என் வீட்டில் கைப்பற்றப்பட்டது என்ன? ரெய்டுக்குப் பின் வேலுமணி