பன்னீர் சிவி சண்முகம்

ஓ.பன்னீர்செல்வம் மீது சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கு: காவல்துறைக்கு உத்தரவு!

அரசியல்

அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்து முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற விவகாரத்தில், ஓ.பன்னீர்செல்வம் மீது அக்கட்சி எம்.பி. சி.வி.சண்முகம் கொடுத்த புகாரின் மீதான வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

2022 ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அன்றைய தினம், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதேநாள், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய ஆதரவாளர்களுடன் சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்திற்கு சென்றார். அங்கு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றது. இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உள்ளே சென்று முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டதாக சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஜூலை 23ஆம் தேதி அதிமுக எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. இதுநாள் வரை காவல் துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி, அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி சதீஷ்குமார் முன்பு, இன்று (ஆகஸ்ட் 11) விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சி.வி.சண்முகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ரியாஸ் முகமது ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, சி.வி.சண்முகம் கொடுத்த புகாரின் மீது பதிவான வழக்கின் நிலை அறிக்கையையும், இந்த மனுவுக்கு பதில் மனுவும் தாக்கல் செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி சதீஷ்குமார், இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
ஜெ.பிரகாஷ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *