சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு பற்றிய மேல் முறையீட்டு வழக்கு விசாரணை இன்று (ஆகஸ்டு 10) பிற்பகல் 2.15 மணிக்குத் தொடங்கியது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த ஜூலை 10 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
அதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி இவ்வழக்கு உயர் நீதிமன்றத்துக்கே அனுப்பப்பட்டது.
முன்னர் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பன்னீரின் வலியுறுத்தலை அடுத்து விலகினார்.
இந்த நிலையில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் வழக்கு விசாரணை இன்று (ஆகஸ்டு 11) பிற்பகல் 2.15 மணிக்குத் தொடங்கியுள்ளது.
ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு கட்சி விதிகளை மீறி நடந்ததா என்பது தொடர்பான வாதங்களை மட்டும் முன்வைக்குமாறு நீதிபதி தெரிவித்தார். இதன்படி வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
–வேந்தன்