அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: எடப்பாடி வேட்புமனு தாக்கல்!

Published On:

| By Selvam

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 18) வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதிமுக அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பொதுச்செயலாளர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று துவங்கியது.

இந்தநிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு காலை 11 மணியளவில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிமுக அலுவலகத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை ரூ.25 ஆயிரம் செலுத்தி துணை பொதுச்செயலாளர் நத்தம் விஸ்வநாதன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமனிடமிருந்து எடப்பாடி பழனிசாமி பெற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

மார்ச் 19-ஆம் தேதி நாளை வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளாகும். மார்ச் 20-ஆம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறுகிறது. மார்ச் 21-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் திரும்ப பெற கடைசி நாளாகும். மார்ச் 26-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 27-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெற உள்ளதால் அதிமுக அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

மேஜர் ஜெயந்த் மரணம்: அரசு சார்பில் அஞ்சலி!

44 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel