அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று(செப்டம்பர் 30) விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் தசரா விடுமுறைக்குப் பிறகு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.
அப்போது ஓ.பன்னீர்செல்வம் சார்பில், அதிமுகவில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், எனவே இதனை முன்கூட்டியே விசாரிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
கலை.ரா
பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வாதம்: எடப்பாடிக்கு நோட்டீஸ்!
ரெப்போ வட்டி விகிதம் 4 வது முறையாக உயர்வு!