அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கில் இன்று (மார்ச் 28) நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பு வழங்கினார்.
ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி, பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை இல்லை.
பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகள் வெளியிடவும் தடை இல்லை என தீர்ப்பு வழங்கினார்.
இதனால் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளனர்.
மூத்த வழக்கறிஞர் சி.மணிசங்கர் மற்றும் அப்துல் சலீம் ஆகியோர் விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் மஹாதேவன், முகமது ஷாஃபிக் ஏற்றுக்கொண்டனர்.
அதன்படி இந்த மேல்முறையீடு மீதான விசாரணை நீதிபதிகள் மஹாதேவன், முகமது ஷாஃபிக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நாளை (மார்ச் 29) நடைபெறும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துவிள்ளது.
பிரியா
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்: பொதுச்செயலாளர் ஆகிறார் எடப்பாடி
ஸ்காட்லாந்து புதிய பிரதமராகிறார் பாகிஸ்தான் வம்சாவளி!