தமிழக போலீசாருக்கு எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை!
”அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். அதிமுக நிர்வாகிகள் மீது பொய்வழக்கு போட்ட போலீசார் எச்சரிக்கையுடன் இருங்கள்” என்று எஸ்.பி.வேலுமணி பேசியுள்ளார்.
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 26) நடைபெற்று வருகிறது.
அதில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், “கடந்த அதிமுக ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்காக அதிக திட்டங்களை நிறைவேற்றியவர் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி.
ஆனால் அதன்பின் ஆட்சிக்கு வந்தவர் சொத்துவரி, மின் கட்டணம், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை அநியாயமாக உயர்த்தி உள்ளார்.
ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த திட்டங்களை தடுத்து நிறுத்துவதில் தான் திமுக அரசு முன்னின்று செயல்பட்டு வருகிறது.
வெள்ள நிவாரண பணிகளில் முதல்வர் ஸ்டாலின் மக்கள் முன்னாள் நீலிக்கண்ணீர் வடித்து வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு ஊழியர்கள் உட்பட தமிழக மக்கள் அனைவரும் திமுக ஆட்சி எப்போது முடியும் என்று காத்திருக்கின்றனர்.
நாம் தேர்தல் பணிகளில் சுழன்று ஈடுபட்டால் போதும். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி பார்த்துக்கொள்வார்.
அதிமுக நிர்வாகிகள் மீது பொய்வழக்கு போட்ட போலீசார் எச்சரிக்கையுடன் இருங்கள். வரும் தேர்தலில் அதிமுக வெல்லும். அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். நாற்பதும் வெல்வோம் நாளை நமதே” என்று எஸ்.பி.வேலுமணி பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”துரோகம் செய்ய நினைத்தால் வாழ முடியாது” : ஜெயக்குமார்
ரஜினிகாந்தின் முக்கிய முடிவு… தள்ளிப்போன லால் சலாம் ரிலீஸ்!