அதிமுக பொதுக்குழு வழக்கு தொடங்கியது : எடப்பாடி தரப்பு வாதம்!

அரசியல்

சட்ட விதிகளுக்கு உட்பட்டே அதிமுக பொதுக்குழுவை கூட்டியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு விளக்கம் அளித்து வருகிறது.

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நேற்று (ஆகஸ்ட் 10) விசாரித்தார்.

அப்போது அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என்று கூறிவிட்டு அப்பதவியை கலைத்துவிட்டு மீண்டும் உருவாக்கியது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

மேலும் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கியதற்கான காரணங்களை விளக்கவும் பழனிசாமி தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தி இருந்தார். இந்தநிலையில் வழக்கின் 2-வது நாள் விசாரணை இன்று (ஆகஸ்ட் 11) தொடங்கியது.

அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி, சட்ட விதிகளுக்கு உட்பட்டே அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதாக விளக்கம் அளித்தார்.

பொதுக்குழுவுக்கான நோட்டீஸ் ஜூலை 1-ம் தேதியே அனுப்பப்பட்டது என்றும், ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியானதால் தலைமைக்கழகம் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் அவர் நீதிபதியிடம் கூறினார்.

கலை.ரா

தமிழகத்துக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: மோடிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *