அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கின் விசாரணை கடந்த 2 நாட்களாக நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு நடந்து வந்தது. நேற்று (ஆகஸ்ட் 10) ஓபிஎஸ், வைரமுத்து தரப்பு வாதங்கள் முடிந்தன.
இந்தநிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன், பொதுக்குழு கூட்டப்பட்டது, ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியானது, ஒற்றைத் தலைமை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து நீதிபதியிடம் விளக்கம் அளித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன், நாளை (ஆகஸ்ட் 12) மாலைக்குள் வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்புக்கு அவகாசம் வழங்கினார். மேலும் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
கலை.ரா