அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி.பாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று (ஆகஸ்ட் 12) அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், வருமானத்திற்கு அதிகமாக 4.72 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அதனடிப்படையில் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்லில் 24 இடங்கள், மதுரை மற்றும் திருப்பூரில் தலா ஒன்று என மொத்தம் 26 இடங்களில் சோதனை நடை பெற்று வருகின்றது.
கிறிஸ்டோபர் ஜெமா